மாநகரம், கைதி, விக்ரம் ஆகிய தரமான படங்களை கொடுத்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது ரஜினியின் கூலி திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் புதிய திரைப்படம் ஒன்றில், ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த திரைப்படத்தை, இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுவரை இயக்குநராக ஜொலித்து வரும் லோகேஷ் கனகராஜ், ஹீரோவாக வெற்றி பெறுவாரா? என்று, ரசிகர்கள் பலரும் ஆவலுடன் உள்ளனர்.