உலக அளவில் நிலநடுக்கத்தின் தாக்கம் அதிகம் உள்ள நாடுகளில் ஒன்று பாகிஸ்தான். பெரும்பாலும், இந்த நாட்டின் வடக்கு, மேற்கு ஆகிய பகுதிகளில் தான், நிலநடுக்கங்கள் அதிக அளவில் ஏற்படுகின்றன.
இந்நிலையில், இந்தியாவின் தேசிய நிலநடுக்கவியல் மையம், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த பதிவில், இன்று மாலை 4 மணி அளவில், பாகிஸ்தான் நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரிக்டர் அளவில் 4.2 ஆக இந்த நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், அந்த எக்ஸ் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.