பஹல்காம் தாக்குதல்.. கண்டனம் தெரிவித்த ரஷ்ய அதிபர் புதின்..

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த அமைச்சர் ரஷ்ய ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியில், “பஹல்காம் தாக்குதல் தொடர்பாக, சர்வதேச அளவில் புதிய அணி ஒன்றை உருவாக்கி, விசாரணை நடத்த வேண்டும். மோடி உண்மையை தான் சொல்கிறாரா? என்று விசாரணை நடத்த வேண்டும். சர்வதேச அணி கண்டுபிடிக்க விடட்டும்” என்று கூறியிருந்தார்.

மேலும், பாகிஸ்தானை சேர்ந்த பலரும், பஹல்காம் விவகாரத்தில், சர்வதேச விசாரணை வேண்டும் என்று கோரி வந்தனர். இந்நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஷ்வால், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “ரஷ்ய அதிபர் புதின், பிரதமர் நரேந்திர மோடிக்கு செல்போனில் அழைப்பு விடுத்து, பஹல்காம் தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தார்.

இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அவர் இரங்கல் தெரிவித்ததோடு, தீவிரவாதத்திற்கு எதிரான சண்டையில், இந்தியாவிற்கு முழு ஆதரவு தருவதாகவும் கூறினார்.

இந்த மோசமான தாக்குதலை நடத்தியவர்களும், அவர்களுக்கு ஆதரவாக உள்ளவர்களையும், நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், ரஷ்யாவின் 80-வது ஆண்டு வெற்றி விழாவிற்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து, இந்தியாவில் நடக்க உள்ள உலக மாநாட்டில் கலந்துக் கொள்ள புதினுக்கு அழைப்பு விடுத்தார்” என்று அவர் கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News