காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் அரசுக்கு எதிராக, பல்வேறு நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை, இந்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
இந்நிலையில், சென்னப் ஆற்றுப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பக்லிஹர் அணையின் தண்ணீரை, இந்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதனால், பாகிஸ்தானுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிரமம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அணையில், குறைந்தபட்ச அளவில் மட்டுமே தன்னீரை நிறுத்தி வைக்க முடியும் என்பதால், இந்த நடவடிக்கை தற்காலிகமானது என்று கூறப்படுகிறது.
இருப்பினும், பாகிஸ்தான் அரசுக்கு இது ஒரு எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது. இதேமாதிரியான நடவடிக்கையை, பந்திபூர் பகுதியில் உள்ள கிஷன்கங்கா அணையிலும் எடுப்பதற்கு, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.