தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித். இவர், இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றாக உள்ள பத்ம பூஷனை, சமீபத்தில் பெற்றிருந்தார்.
இந்நிலையில், நடிகர் அஜித்தை பாராட்டும் வகையில், பிரபலம் ஒருவர் பேசியிருப்பது, வைரலாக பரவி வருகிறது. அதாவது, நடன இயக்குநர் பாபா பாஸ்கர், அஜித்துடன் பணியாற்றிய அனுபவம் குறித்து, நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.
அதில், “அஜித்தின் ஏகன் படத்தில் இடம்பெற்றுள்ள ஃப்ரீடம் என்ற பாடலுக்கு, நான் நடன இயக்குநராக பணியாற்றினேன். அவரு ரொம்ப ஓபன்-ஆ இருப்பாரு.
பாசத்தையும் அதிகமாக காட்டுவாரு, திட்டுவதையும் அதிகமாக செய்வாரு. சக தொழில்நுட்ப கலைஞர்களை பார்த்துக் கொள்ளும் விதத்தில், அவர் ஒரு குட்டி எம்.ஜி.ஆர். தான்” என்று, பாபா பாஸ்கர் பேசியுள்ளார்.