ஜெயிலர் 2-வில் ரஜினியுடன் கைகோர்க்கும் பிரபல ஹீரோ?

நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த 2023-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் ஜெயிலர். அனிருத் இசையில் உருவான இந்த திரைப்படம், 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து, மிகப்பெரிய சாதனையை படைத்திருந்தது.

தற்போது, இந்த திரைப்படத்தின் 2-ஆம் பாகம் உருவாகி வருகிறது. முதல் பாகத்தை போலவே, 2-ஆம் பாகத்திலும், மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த படத்தின் 2-ஆம் பாகத்தில், மற்றொரு பிரபல ஹீரோ நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பிரபல தெலுங்கு ஹீரோ பாலய்யா, காவல்துறை அதிகாரி வேடத்தில், ஜெயிலர் 2 படத்தில் நடிக்க உள்ளாராம்.

RELATED ARTICLES

Recent News