கார்த்திக் சுப்புராஜ், சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள ரெட்ரோ திரைப்படம், இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியுள்ளது. பல்வேறு எதிர்பார்ப்புகளுடன், படத்தை பார்த்த ரசிகர்களும், பொதுமக்களும், தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அதன் அடிப்படையில், படத்தின் முதல் பாதி, ரொமான்டிக் காட்சிகளுடன், சிறப்பாக இருப்பதாகவும், 2-ஆம் பாதியில் இருந்து, படம் தொய்வு அடைவதாகவும் கூறப்படுகிறது.
ஆக்ஷன் காட்சிகள் சிறப்பாக இருந்தாலும், அதற்கான காரணங்கள் வலுவாக இல்லாததால், படத்துடன் ரசிகர்கள் கனெக்ட் செய்ய முடியவில்லை என்றும், சொல்லப்படுகிறது.