போர் நிறுத்த ஒப்பந்ததை மீறி ஜம்முவின் எல்லை பகுதிகளில், பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை, பாகிஸ்தான் தூதரகத்தில், கேக் வெட்டி கொண்டாடியதாக, சமீபத்தில் தகவல் ஒன்று பரவியது.
இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு எதிராக, இந்திய அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால், இரு நாட்டிற்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது.
இந்நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, ஜம்முவின் அக்னுர், சுந்தர்பானி ஆகிய பகுதிகளில், பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதன்மூலம், தொடர்ச்சியாக 6-வது முறையாக, பாகிஸ்தான் ராணுவம் பேர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளது.