பிரதமர் மோடி ஆர்.எஸ்.எஸ்-ன் தலைவர் சந்திப்பு! காரணம் என்ன?

பஹல்காம் தாக்குதல் சம்பவத்தின் பரபரப்பு குறையான நிலையில், பிரதமர் நரேந்திர மோடியும், ஆர்.எஸ்.எஸ்.-ன் தலைவர் மோகன் பகவத்தும் சந்தித்துள்ளனர்.

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், சுற்றுலா பயணிகள் மீது, தீவிரவாதிகள் சமீபத்தில் தாக்குதல் நடத்தியிருந்தனர். இந்த சம்பவம், நாடு முழுவதும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த பரபரப்பு இன்னும் குறையாத நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, ஆா்.எஸ்.எஸ்-ன் தலைவர் மோகன் பகவத்தை சந்தித்துள்ளார். ஒன்றரை மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில், பஹல்காம் தாக்குதல் சம்பவம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து, இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது.

முன்னதாக, பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகள் குறித்து, மோகன் பகவத் பேசும்போது, “பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் தொல்லை கொடுத்தால், அவர்களுக்கு நாம் முதலில் புரிய வைக்க வேண்டும். அவர்களுக்கு நாம் சொல்வது புரியவில்லை என்றால், மற்றொரு தீர்வை தான் நாம் எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

RELATED ARTICLES

Recent News