காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், சமீபத்தில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில், 28 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம், நாடு முழுவதும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், தீவிரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் கமாண்டர் ஃபரூக் அகமது தான், இந்த தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டுள்ளார் என்று, தேசிய புலனாய்வு அமைப்பின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், தனது ஸ்லீப்பர் செல் அமைப்புகளின் மூலமாக, தீவிரவாதிகளுக்கு அவர் தொடர்ச்சியாக உதவி செய்து வந்துள்ளதும், தெரியவந்துள்ளது.
இதுமட்டுமின்றி, மலைப்பாதைகள் குறித்து விரிவான அறிவுத்திறன் கொண்ட ஃபரூக் அப்துல்லா, தீவிரவாதிகள் பலர், இந்தியாவிற்குள் ஊடுருவதற்கு, உதவி செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, தீவிரவாத செயல்களை ஒடுக்கும் நடவடிக்கையைாக, குப்வாரா பகுதியில் உள்ள ஃபரூக்கின் வீடு, இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.