ஸ்ரீபெரும்புதூர் அருகே, 4 வருடங்களுக்கு முன்பே கட்டப்பட்ட குடிநீர் தேக்கத் தொட்டி, பயன்பாட்டுக்கு வராமலே பழுதாகியுள்ளதாக, பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நகரில், சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 4 வருடங்களுக்கு முன்பு, குடிநீர்த் தேக்க தொட்டி அமைக்கப்பட்டிருந்தது.
ஆனால், இந்த குடிநீர் தேக்க தொட்டி, இன்னும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், குடிநீர் தேக்கத் தொட்டியின், குழாய்கள், படிக்கட்டுகள் சேதம் அடைந்துள்ளன என்று, பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மேலும், இந்த குடிநீர் தேக்கத் தொட்டியின் மேலே ஏறி, மது அருந்துவதையும், கஞ்சா புகைப்பதையும் சிலர் வாடிக்கையாக வைத்துள்ளதாகவும், குற்றஞ்சாட்டுகின்றனர். எனவே, மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், இந்த நீர்நிலை தேக்கத் தொட்டியை, பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்றும், அவர் வலியுறுத்தியுள்ளனர்.