காக்கும் கரங்கள் பயிற்சி வகுப்புகள்.. துவக்கி வைத்த ஆட்சியர்..

காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ், முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தமிழக அரசின் பயிற்சி வகுப்புகளை, வேலூர் மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

காக்கும் கரங்கள் என்ற திட்டத்தினை, தமிழக அரசு அண்மையில் அறிமுகப்படுத்தியிருந்தது. இந்த திட்டத்தின் கீழ், முன்னாள் ராணுவ வீரர்களை, தொழில் முனைவோர்களாக மாற்றும் வகையில் பயிற்சிகள் வழங்கப்படும். மேலும், ஒரு கோடி ரூபாய் வரையில், கடனுதவியும் வழங்கப்படும்.

இந்நிலையில், இந்த திட்டத்தின் கீழ், வேலூர் மாவட்ட முன்னாள் ராணுவ வீரர்களுக்கான பயிற்சி வகுப்புகளை, மாவட்ட ஆட்சியர் சுப்பு லட்சமி, இன்று துவக்கி வைத்தார். 5 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சி வகுப்புகளில், முன்னாள் ராணுவ வீரர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.

RELATED ARTICLES

Recent News