மணிரத்னம் இயக்கத்தில், கமல், சிம்பு, த்ரிஷா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் தக் லைஃப். வரும் ஜூன் 5-ஆம் தேதி அன்று, இந்த திரைப்படம், திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
ரிலீஸ்-க்கும் இன்னும் ஒரு மாதமே இருப்பதால், படத்தின் புரமோஷன் பணிகள், மும்மரமாக நடந்து வருகிறது. அந்த வகையில், கடந்த 18-ஆம் தேதி அன்று, இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை, படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர்.
ரசிகர்களிடம் இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில், தற்போது இந்த பாடல் நிகழ்த்தியுள்ள சாதனை குறித்து தெரியவந்துள்ளது. அதாவது, இந்த பாடல், Youtube டிரெண்டிங்கில், முதலிடம் பெற்று வருகிறது.