நம்ம TR-ஆ இது? அதிர்ச்சியான ரசிகர்கள்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராகவும், நடிகராகவும் இருந்தவர் டி.ராஜேந்திரன். இவரது பேச்சுக்கும், அடுக்குமொழி வசனத்துக்கும் ரசிகர்கள் பலர் இருந்து வருகின்றனர். கடந்த ஆண்டு இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வந்தார்.

சிகிச்சை முடிந்த பிறகு, இந்தியா வந்த அவர், நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துக் கொள்ளாமலே இருந்து வந்தார். இந்நிலையில், நடிகர் டி.ராஜேந்தர் நிகழ்ச்சி ஒன்றில், சமீபத்தில் கலந்துக் கொண்டுள்ளார். அப்போது, தலைமுடி கொட்டிப்போன நிலையில், மிகவும் தள்ளாதபடி நடந்து வந்துள்ளார்.

இதனை பார்த்தவர்கள், கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இதுதொடர்பான புகைப்படம் வெளியாகி, அவரது ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

RELATED ARTICLES

Recent News