ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், தனது 45-வது படத்தில், நடிகர் சூர்யா தற்போது நடித்து வருகிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தான், இந்த திரைப்படத்தை தயாரித்து வருகிறது.
மேலும், சாய் அபயங்கர் என்ற இளம் இசையமைப்பாளர் இந்த படத்திற்கு, இசை அமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு, விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில், இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சூர்யாவின் இரண்டு கதாபாத்திரங்கள் குறித்து, முக்கிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.
அதாவது, இந்த திரைப்படத்தில், நடிகர் சூர்யா 2 கதாபாத்திரங்களில் நடித்துள்ளாராம். ஒரு கதாபாத்திரத்தில் வக்கீலாகவும், இன்னொரு கதாபாத்திரத்தில் அய்யனாராகவும் அவர் நடித்துள்ளாராம். இது, ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.