பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இந்த படத்திற்கு பிறகு, கர்ணன், மாமன்னன், வாழை என்று தொடர் வெற்றிப் படங்களை, இயக்கியுள்ளார்.
தற்போது, நடிகர் துருவ் விக்ரமை வைத்து, பைசன் என்ற படத்தை இயக்கி வருகிறார். பா.ரஞ்சித் தயாரிக்கும் இந்த படம், கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகி வருகிறது.
இந்நிலையில், இந்த திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் ஒன்று தற்போது கிடைத்துள்ளது. அதன்படி, வரும் ஆகஸ்டு மாதம் இந்த திரைப்படம், ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.