லப்பர் பந்து-க்கு பின் எகிறிய தினேஷின் சம்பளம்!

அட்டகத்தி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தினேஷ். இந்த படத்திற்கு பிறகு, பல்வேறு வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்த இவர், சமீபத்தில் லப்பர் பந்து என்ற படத்தில், 2-வது கதாநாயகனாக நடித்து கவனம் ஈர்த்தார்.

அந்த திரைப்படமும், மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதன்காரணமாக, இவரது மார்கெட் தற்போது உயர்ந்துள்ளதாக, தகவல் கசிந்துள்ளது.

அதாவது, லப்பர் பந்து படத்திற்கு முன்பு, 1 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி வந்த அவர், அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு, சம்பளத்தை 8 கோடியாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல், பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News