2025-ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற கூட்டத் தொடர், நேற்று குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது. இதனையடுத்து, இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மூலமாக, மத்திய பட்ஜெட் 2025-26 தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து, நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். அப்போது அவர் பேசிய விவரங்கள் பின்வருமாறு:-
“சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் உச்சவரம்பு ரூபாய் 10 கோடியாக உயர்த்தப்படுகிறது.
மாநிலங்களுடன் இணைந்து தான் தன்ய கிரிஷி யோஜனா திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம், 100 மாவட்டங்களில் 1.7 கோடி விவசாயிகள் பயன்பெறுவர். கிராமங்களில் இருந்து பணிக்காக இடம்பெயர்வதை தடுக்க தான் தன்ய கிரிஷி யோஜனா திட்டம்.
அசாமில் 12.7 லட்சம் மெட்ரிக் டன் யூரியா உற்பத்தி செய்யும் விதமாக தொழிற்சாலை அமைக்கப்படும்.
பீகாரில் தாமரை விதைகளுக்காக வாரியம் அமைக்கப்படும். உணவு பதப்படுத்துதல் பல்கலைக்கழகம் பீகாரில் அமைக்கப்படும்.
நாட்டில் பருத்தி உற்பத்தியை அதிகரிக்க சிறப்புத் திட்டம்.
பருப்பு உற்பத்திக்கு 6 ஆண்டு திட்டம். இந்த திட்டத்தின் கீழ், துவரை, உளுந்து உள்ளிட்ட பருப்பு உற்பத்தியை அதிகரிக்க திட்டம்.
கிஷான் கிரடிட் கார்டுகளுக்கான உச்ச வரம்பு ரூபாய் 3 லட்சத்தில் இருந்து ரூபாய் 5 லட்சமாக உயர்த்தப்படுகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் ஐஐடி-க்களில் 100 சதவீத மாணவர் சேர்க்கை அதிகரிப்பு. 2014-க்கு பிறகு தொடங்கப்பட்ட ஐஐடி-க்களில் உட்கட்டமைப்பு மேம்படுத்த நடவடிக்கை. நாடு முழுவதும் 23 ஐஐடி-க்கள் மேம்படுத்தப்படும். இந்திய மொழிப்பாடங்கள் அனைத்தும் விரைவில் டிஜிட்டல் மயமாக்கப்படும்.
உலக அளவில் பொம்மை தயாரிப்பு மையமாக இந்தியாவை மாற்ற நடவடிக்கை.
கடந்த 10 ஆண்டுகளில் தானிய உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற்றுள்ளது.தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பெண்கள் 5 லட்சம் பேருக்கு ரூபாய் 2 கோடி கடன் வழங்கப்படும்.
தேசிய உற்பத்தி இயக்கம் தொடங்கப்படும்.
அனைத்து அரசு உயர்நிலை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு இணையதள வசதி.
காலணி மற்றும் தோல் தொழிற்சாலையில் 22 லட்சம் வேலை வாய்ப்புகள். இந்த தொழிற்சாலைக்கான திட்டம் மூலமாக 4 லட்சம் கோடி முதலீடு ஈட்ட திட்டம்.
அடுத்த ஆண்டு, மருத்துவக் கல்லூரிகளில் 10 ஆயிரம் கூடுதல் இடங்கள் ஏற்படுத்தப்படும். அடுத்த 3 ஆண்டுகளில் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும்”