நகைபிரியர்கள் ஷாக்: உச்சத்தை தொட்ட தங்கம் விலை!

அக்டோபர் மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை ஏற்றத்துடன் காணப்படுகிறது. அதன்படி வாரத்தின் கடைசி வாரமான இன்று (அக்.29) சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று குறைந்த நிலையில் மீண்டும் இன்று அதிரடியாக அதிகரித்துள்ளது.

நேற்று ஆபரணத்தங்கம் ஒரு சவரன் ரூபாய் 58,520க்கும், ஒரு கிராம் ரூபாய் 7,315 க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 480 அதிகரித்து ரூபாய் 59,000-க்கும், கிராமுக்கு ரூபாய் 60 உயர்ந்து ரூபாய் 7,375-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், 18 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 400 உயர்ந்து ரூபாய் 48,600-க்கும், கிராம் ரூ.6,075-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் வெள்ளி விலையில் ரூபாய் 1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.108-க்கும், ஒரு கிலோ ரூ.1,08,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News