தனியார் மின் பேருந்து கவிழ்ந்து விபத்து; பள்ளி சிறுவன் உட்பட நான்கு பேர் பலி!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் காந்தி நகர் பகுதியில் தனியார் மினி பேருந்து கவிழ்ந்து நான்கு பேர் பலியாகியுள்ளனர். பத்துக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

காயம் அடைந்தவர்களை தீயணைப்பு துறையினர் காவல் துறையினர் மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து மம்சாபுரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் மம்சாபுரத்திலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி தனியார் மினி பேருந்து 35 பேருக்கும் மேற்பட்டவர்களை ஏற்றிக்கொண்டு வந்துள்ளது.

மினி பேருந்தை அதிவேகமாக ஓட்டி வந்த ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மினி பேருந்து காந்திநகர் ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே சாலையின் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது என தெரியவந்தது.

காயம்பட்டவரின் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் சூழ்ந்ததால் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

RELATED ARTICLES

Recent News