ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு!

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் வருடந்தோறும் செப்டம்பர் 11ஆம் தேதியன்று இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை குருபூஜையாக கொண்டாடப்படுகிறது. அதே போல், பசும்பொன் பகுதியில், அக்டோபர் 30ஆம் தேதியன்று முத்துராமலிங்க தேவரின் நினைவு தினத்தை, குருபூஜையாக கொண்டாடப்படுகிறது.

இதனையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் அக்டோபர் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் அறிவித்துள்ளார். மேலும், வெளி மாவட்டத்தைச் சேர்ந்த வாகனங்கள் ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் உரிய அனுமதியின்றி நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News