நடிகர் சங்கத் தலைவர் பொறுப்பிலிருந்து மோகன்லால் ராஜினாமா

மலையாள நடிகர்கள், இயக்குனர்கள் மீது நடிகைகள் தொடர்ந்து பாலியல் புகார்களை அளித்துவரும் நிலையில், மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’ அமைப்பின் தலைவரான நடிகர் மோகன்லால் உள்ளிட்ட 17 நிர்வாகிகள் மொத்தமாக ராஜினாமா செய்தனர்.

சமீபத்தில் நடிகை ரேவதி சம்பத், நடிகர்கள் சித்திக் மற்றும் ரியாஸ் கான் இருவரும் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டினார். தொடர்ந்து பெங்காலி நடிகை ஸ்ரீலேகா மித்ரா மலையாள இயக்குநர் ரஞ்சித் மீது குற்றம் சாட்டினார்.

இப்படி தொடர் குற்றச்சாட்டுகளால் மலையாள சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’ அமைப்பின் தலைவரான நடிகர் மோகன்லால் உள்ளிட்ட 17 நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்து, நடிகர் சங்கத்தின் செயற்குழுவை கலைத்தனர்.

RELATED ARTICLES

Recent News