எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது!

ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தனர்.

ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று காலை மீன்பிடிக்க சென்ற விசைப்படகு மீனவர்கள் தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே மீன்பிடித்து கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படை ஒரு விசைப்படகையும் அதிலிருந்த 8 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்து மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

சிறைபிடிக்கப்பட்ட 8 மீனவர்களிடம் முதல்கட்ட விசாரணை முடித்துக்கொண்டு இன்று காலை மீனவர்கள் அனைவரும் படகுடன் மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக இலங்கை கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News