அந்தாதூன் என்ற இந்தி படம், தற்போது அந்தகன் என்ற பெயரில், தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. பிரசாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரகனி ஆகியோர் நடித்துள்ள இப்படம், கடந்த வெள்ளிக் கிழமை அன்று ரிலீஸ் ஆனது.
முதல் நாளில் இருந்தே ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வரும் இப்படம், வசூலிலும் லாபத்தை பெற்று வருகிறது.
அதாவது, முதல் நாளில் ரூபாய் 65 லட்சத்தை வசூலித்த அந்தகன், இரண்டு நாட்களில் 2.1 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது. முதல் நாளை காட்டிலும், இரண்டாவது நாளில், 2 மடங்கு வசூலித்திருப்பது, படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
