டெல்லியின் கோட்லா விகார் பகுதியில் உள்ள மைதானத்தில் நேற்று சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, பந்து மைதானத்தின் ஓரத்தில் இருந்த இரும்பு போஸ்ட் கம்பத்தின் அருகே விழுந்துள்ளது.
அந்த பந்தை எடுக்க சென்ற 13 வயது சிறுவன் மீது மின்சாரம் பாய்ந்தது. அங்கிருந்தவர்கள் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.