குவைத் தீ விபத்தில் 5 தமிழர்கள் இறந்து இருக்க வாய்ப்புள்ளதாக தகவல் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.
ராஜ் செய்திகளுக்கு பிரத்யேக பேட்டி அளித்த வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்ததாவது,
குவைத் மங்காப் தீவிபத்தில் 195 நபர்கள் தங்கி இருந்த நிலையில் 48 பேர் இறந்து உள்ளனர். தமிழகத்தை சேர்ந்த 5 பேர் இறந்து இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர். முதலமைச்சர் துறை சார்பான பணிகளை முடுக்கி விட்டு அங்கு சிகிச்சையில் உள்ள தமிழர்களுக்கு உதவ வேண்டும் இறந்தவர் உடல்களை உடனடியாக தமிழகம் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த ராமகருப்பன்ணன், வீராசாமி மாரியப்பன்,சின்னதுரை கிருஷ்ணமூர்த்தி, முகமது ஷெரிப், ரிச்சர்டு ராய் உள்ளிட்டோர் இறந்து இருக்கலாம் என தகவல்கள் வந்திருகின்றன. அவை இன்னும் உறுதி செய்யப்படவில்லை இறந்தவர்கள் தொடர்பான அதிகார பூர்வ தகவல்கள் கிடைத்ததும் அடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளபடும் என்றார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தமிழகத்தை சேர்ந்த தமிழ்செல்வி என்பவர் உத்ரகாண்டில் புனித பயணத்தின் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அரசு மேற்கொண்ட நடவடிக்கையின் பயணாய் அவரது உடல் தமிழகம் கொண்டு வரப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கபட்டது குறிப்பிடதக்கது.