மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று காலை விஐபி பிரேக் தரிசனம் மூலம் திருப்பதி கோவிலில் ஏழுமலையானை வழிபட்டார்.
சாமி கும்பிடுவதற்காக நேற்று இரவு திருப்பதி மலைக்கு வந்த அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்ற நிலையில் திருமலையில் இரவு தங்கிய அவர் இன்று காலை விஐபி பிரேக் தரிசனம் மூலம் கோவிலுக்கு சென்று ஏழுமலையானை வழிபட்டார்.
சாமி கும்பிட்ட பின் அவருக்கு தேவஸ்தான நிர்வாகம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர்.
அமித்ஷா வருகையை முன்னிட்டு திருப்பதி மலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
அமித்ஷா கோவிலில் இருந்து புறப்பட்டு செல்லும் வரை அந்த பகுதியில் பக்தர்கள் உட்பட யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.