கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து திங்கள்நகர் சென்ற அரசு பேருந்து ஒன்றில் பயணித்த பயணிகள் குடை பிடித்தபடி சென்றுள்ளனர்.
அதாவது அந்த அரசு பேருந்தின் மேற்கூரையில் இருந்த சிறு, சிறு ஓட்டைகள் வழியாக மழைநீர் சொட்டு, சொட்டாக விழுந்து கொண்டிருந்தது. இதனால் அந்த பஸ்சில் பயணித்த பயணிகள் பஸ்சுக்குள்ளும் குடைகளை பிடித்தவாறு பயணம் செய்துள்ளனர்.
இதேபோல் வேறு சில பஸ்களிலும் மழைநீர் ஒழுகியது. எனவே ஓட்டை, உடைசலான பஸ்களை சீரமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.