திமுக இளைஞரணி நிர்வாகிகளுடன் இன்றும் (மே.16), நாளையும் (மே.17) அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.
அமைச்சரும்,திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞரணி நிர்வாகிகளோடு அவ்வப்போது ஆலோசனை கூட்டத்தை நடத்தி வருகிறார்.இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள திமுக இளைஞரணி நிர்வாகிகளை மண்டலம் வாரியாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டல நிர்வாகிகளுடன் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதுவரை சென்னை,காஞ்சிபுரம் திருவள்ளூர் உள்ளிட்ட இரண்டு மண்டலங்களை சேர்ந்த நிர்வாகிகளோடு ஆலோசனை கூட்டத்தை முடித்துள்ள நிலையில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டதால் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தி வந்த உதயநிதி ஸ்டாலின் இப்போது மீண்டும் இளைஞரணி நிர்வாகிகளோடு ஆலோசனையை இன்றும் நாளையும் நடத்துகிறார்
இன்று மாலை நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் திருவண்ணாமலை தெற்கு மற்றும் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.
நாளை மாலை நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் திருப்பத்தூர், வேலூர்,ராணிப்பேட்டை மாவட்டங்களை சேர்ந்த இளைஞர் அணியின் மாவட்ட மாநகர,மாநில நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் இளைஞர் அணி நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய உள்ள உதயநிதி ஸ்டாலின், மினிட் புத்தகம்,கட்சி பணிகள் குறித்த பத்திரிக்கை செய்திகள் புகைப்படங்கள் ஆகியவற்றுடன் இளைஞர் அணி நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.