சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருபவர் அர்ச்சனா. இவர், சமீபத்தில் பிரபல நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு, டைட்டில் வின்னராக பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், நடிகை அர்ச்சனா பிரபல நடிகரை காதலிப்பதாகவும், அதனை அவரே உறுதி செய்திருப்பதாகவும், நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.
அதாவது, பிரபல சின்னத்திரை நடிகர் அருண், போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இதுதொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவில், என்னுடைய ஹீரோவை புகைப்படம் எடுத்ததற்கு நன்றி என கூறி, புகைப்படக் கலைஞரை, அர்ச்சனா Tag செய்துள்ளார்.

இதுதான், இருவரும் காதலிப்பதாக பரவும் கிசுகிசுவுக்கு காரணமாக மாறியுள்ளது.
