சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு பல கோடி ரூபாய் மோசடி செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை பூக்கடை, சௌவுக்கார்பேட்டை , பகுதியில் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் நடப்பதாக பூக்கடை காவல் நிலைய தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் இன்று சௌவுக்கார்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தி ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கைதுசெய்யப்பட்ட நபர்கள் சௌவுக்கார்பேட்டையை சேர்ந்த சந்தீப்(33), கணேஷ்(32), ராஜேஷ்குமார் ஜெயின் (32), கொண்டித்தோப்பை சேர்ந்த நீரஜ்(41), அங்கித்(32) என்பது தெரியவந்தது.
மேலும் கைதான 6 பேரும் reddyannaoofficical என்ற இணைய தளம் மூலம் ஆன்லைனில் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது..
மேலும் இவர்களது இணையதளம் மூலம் பலர் லட்சக்கணக்கில் பந்தயம் கட்டி ஏமாந்தததும், ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போலீஸார் 6 பேரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.