சிங்கிளா சுத்திட்டு இருக்க நான் சிம்பு இல்ல: “இங்க நான் தான் கிங்கு” படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

நடிகர் சந்தானம் வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றிக்கு பிறகு நடித்துள்ள திரைப்படம் இங்க நான் தான் கிங்கு.

இப்படத்தை இந்தியா -பாகிஸ்தான் என்ற படத்தை இயக்கிய ஆனந்த் நாராயண் இயக்கியுள்ளார். இதில் பிரியாலயா, தம்பி ராமையா, மனோபாலா, கூல் சுரேஷ் என பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இதில் “நடிகர் சங்கத்த கட்டி முடிச்சுட்டு தான் கல்யாணம் பண்ணுவேன் சொல்ல நான் விஷாலும் இல்ல”, “எப்பவும் சிங்கிளா சுத்திட்டு இருக்க சிம்புவும் இல்ல” என்ற வசனமும் இடம் பெற்றுள்ளது.

டிரெயிலர் ஆரம்பத்தில் நடிகர் விஷால் மற்றும் சிம்புவை கலாய்ந்து வரும் வசனங்கள் ரசிகர் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

RELATED ARTICLES

Recent News