பாளையங்கோட்டை மத்திய சிறையில் விசாரணை கைதி உயிரிழந்தார்.
பாளையங்கோட்டை மத்திய சிறையில் சிவகாசியை சேர்ந்த ஜெயக்குமார் (60)என்பவர் விசாரணை கைதியாக கோவில்பட்டி காவல் நிலைய வழக்கு தொடர்பாக மத்திய சிறையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று அதிகாலை அவருக்கு நெஞ்சுவலி காரணமாக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார்.