நெஞ்சே பதறுதே… தெருநாய் கடித்ததில் 4 வயது சிறுமி பலி!

ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் மாவட்டத்தில் உள்ள மசூதி அருகே ரேஷ்மா என்கிற 4 வயது சிறுமி தந்தை வருகைக்காக காத்திருந்தார்.

அப்போது அங்கு சுற்றி திரிந்து கொண்டிருந்த தெரு நாய் ரேஷ்மாவை கடித்துள்ளது. இதில் பலத்த காயமடைந்த ரேஷ்மா மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஆனால் சிறுமி சிகிச்சை பலனின்றி பலியானார். உடற்கூராய்வுக்கு பின் சிறுமியின் சடலத்தை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ரேஷ்மா குடும்பத்தினர், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மசூதியை பார்வையிட வந்ததாக அம்பா மாதா காவல் நிலைய தலைமைக் காவலர் ரஞ்சித் சிங் தெரிவித்தார்.

இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News