இன்னும் எத்தனை உயிர்? ஆண்லைன் ரம்பி விளையாடிய இளைஞர் தற்கொலை!

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே வண்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுப்பிரமணி மகன் ஜெயராமன் இவர் டிப்ளமோ படிப்பை முடித்துள்ளார்.

இந்த நிலையில் இவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் மோகம் கொண்டுள்ள நிலையில் கடன் வாங்கி பல லட்ச ரூபாய் ஆன்லைன் சூதாட்டத்தில் இழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட ஜெயராமன் தான் தற்கொலை செய்ய போவதாக பெற்றோருக்கு தொலைபேசியில் குறுஞ்செய்தி அனுப்பி விட்டு நள்ளிரவு வீட்டிற்கு எதிரே உள்ள ரயில்வே தண்டவாளத்திற்கு சென்று திருச்சியில் இருந்து சென்னை மார்க்கம் சென்ற விரைவு ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து வந்த திருநாவலூர் போலீசார் விருதாச்சலம் ரயில்வே போலீசார் உதவியுடன் உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் பல லட்ச ரூபாய் கடன் பெற்று ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்துள்ளதால் மனமுடைந்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பல லட்சம் பணம் இழந்த இளைஞர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

RELATED ARTICLES

Recent News