பர்தா போடாத காரணத்தினால் மனைவியை அடித்து கொன்ற கணவன்!

சென்னை அயனாவரம் பகுதியை சார்ந்த உமர் தனது மனைவி சையத் அலி பாத்திமாவுடன் புதிய வீட்டிற்கு குடியேறியுள்ளார்.

இந்த நிலையில் புதிய வீட்டிற்கு சென்ற பொழுது உறவினர்கள் வீட்டுக்கு வரவே அப்பொழுது பர்தா போடவில்லை என கணவன் மனைவிக்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து கணவர் உமர் தனது மனைவி சையது அலி பாத்திமாவை பிரியாணி செய்யும் கரண்டியால் சரமாரியாக தாக்கியுள்ளார். ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்த சையத் அலி பாத்திமா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்ட கணவர் உமர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு அயனாவரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News