வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிப்பு இடத்தில் இருந்து காட்டுக்குள் தப்பி சென்ற காட்டெருமையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வண்டலுார் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், சமீபத்தில், இரண்டு அனுமன் குரங்குகள் கூண்டில் இருந்து தப்பி, காட்டு பகுதிக்கு சென்றன, பல நாட்கள் தேடுதலுக்கு பிறகு, இரண்டு குரங்குகளும் பிடிப்பட்டன.
நேற்று மாலை இரண்டு வயது காட்டுமாடு ஒன்று, கூண்டில் இருந்து தப்பியுள்ளது.
காட்டு மாடுகள் பராமரிக்கும் கூண்டில் தண்ணீர் தொட்டி அமைக்கும் பணிகளை வடமாநிலத்தவர்கள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பின்னால் உணவு வழங்கும் அஜாகரையாக திறந்து கிடந்ததால் இரண்டு வயது காட்டெருமை தப்பி காட்டுகுள் சென்றது.
தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் காட்டெருமை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது 30-க்கும் மேற்பட்ட காட்டெருமை இருப்பது குறிப்பிடதக்கது.