கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
வடசென்னை பகுதிகளில் கஞ்சா கடத்தி விற்பனையில் ஈடுப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்ததன் பேரில் மதுரையைச் சேர்ந்த கிருஷ்ணன் (53), ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெகன் (40), சிவகங்கையைச் சேர்ந்த ஆனந்த முருகன் (37), மதுரையைச் சேர்ந்த கனி (26), சிக்கந்தர் (40), திருச்சியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (39) ஆகிய ஆறு நபர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபர்களில் ராதாகிருஷ்ணன் அரசு போக்குவரத்து கழக ஊழியர் என்பதும் சிக்கந்தர் என்பவர் திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள ஸ்மார்ட் மேன்ஷன் உரிமையாளர் என்பதும் தெரியவந்தது மேலும்
இவர்களிடமிருந்து 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.