கடந்த 2008ம் ஆண்டில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா அப்பா, மகன் என்று இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து வெளிவந்த திரைப்படம் ‘வாரணம் ஆயிரம்’. இப்படத்தில் சிம்ரன், சமீரா ரெட்டி, திவ்யா ஸ்பந்தனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசை அமைத்திருந்தார்.
சூப்பர் ஹிட்டான இப்படம் சமீபத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. தமிழ்நாட்டை தொடர்ந்து கர்நாடகா மாநிலத்திலும் குறிப்பிட்ட சில திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்தனர். தற்போது வரை கர்நாடகா மாநிலத்தில் மட்டும் ரூ. 75 லட்சம் வசூல் ஆகியுள்ளதாக விநியோகஸ்தர் அறிவித்துள்ளார்.