தெலங்கானா மாநிலம் கரீம் நகரில் ஒரு குடும்பத்தினர் வீட்டில் பூஜை செய்து விளக்கேற்றி சாமி படத்தின் முன் வைத்துவிட்டு மேடாரம் கிராமத்தில் நடைபெறும் சம்மக்கா, சாரக்கா கோவில் திருவிழாவுக்கு நேற்று இரவு சென்றனர்.
சற்று நேரத்திற்கு முன் அவர்களுடைய வீடு திடீரென்று தீப்பிடித்து எரிந்தது.
தீ விபத்து பற்றி கிராம மக்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் அளித்தனர்.
இந்த நிலையில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் திடீரென்று வெடித்து சிதறி பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
இதனால் அங்கிருந்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்து ஓட்டம் பிடித்தனர்.
இந்த நிலையில் தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்தி வீட்டின் உரிமையாளருக்கு தகவல் அளித்துள்ளனர்.
கோவிலுக்கு செல்வதற்கு முன் வீட்டு உரிமையாளர் ஏற்றி வைத்த விளக்கில் இருந்து தீ பரவி தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.