கார்த்திக் சிதம்பரத்தையை காணவில்லை: போஸ்டரால் பரபரப்பு!

சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் கார்த்திக் சிதம்பரம் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனான இவருக்கு காங்கிரஸ் கட்சியிலே கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது.

ஏற்கனவே காங்கிரஸ் கட்சியினர் ஆலோசனைக் கூட்டம் நடத்தி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமசாமி முன்னாள் மத்திய இணை அமைச்சர் இஎம் சுதர்சனநாச்சியப்பன் ஆகியோர் தலைமையில் கார்த்திக் சிதம்பரத்திற்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சீட்டு வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி ஒட்டு மொத்த காங்கிரஸ் கட்சியினர் கார்த்திக் சிதம்பரத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று சிவகங்கை நகர் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கார்த்திக் சிதம்பரத்தை காணவில்லை என்ற போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது கண்டா வரச் சொல்லுங்க அவரை கையோடு கூட்டி வாருங்கள் என்றெல்லாம் வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர்.

சமூக வலைதளங்களிலும் கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக பதிவுகள் அதிகரித்து வருகிறது நெட் பிலிக்சில் படம் பார்த்துக் கொண்டும் தொகுதியை மறந்து சுற்றித் தெரியும் அவரை கண்டுபிடித்து தருவோருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் சிவகங்கை மக்கள் என்று போஸ்டர்களும் ஏராளமாக ஒட்டப்பட்டுள்ளது போஸ்டர் ஒட்டப்பட்ட தகவல் தெரிந்து கார்த்திக் சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் சிலர் கார்த்திக் சிதம்பதற்கு எதிராக ஓட்டப்பட்ட போஸ்டர்களை அப்புறப்படுத்தி வருகின்றனர்.

காங்கிரஸ் உட்கட்சியிலே கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் சிவகங்கையில் நள்ளிரவில் எதிர்ப்பாளர்கள் போஸ்டர் ஓட்டி சென்றதும் அதிகாலையில் கார்த்திக் சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் சிலர் கார்த்திக் சிதம்பரத்தை காணவில்லை என்று ஒட்டிய போஸ்டர்களை கிழித்து வருவதும் சிவகங்கையில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கார்த்திக் சிதம்பரத்திற்கு எதிராக கண்டனங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News