தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி : பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப் பயணமாக வரும் 27ம் தேதி தமிழகம் வருகிறார். ன்று திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறும் மிக பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். அதன் பிறகு அங்கிருந்து கேரளா புறப்பட்டு செல்கிறார்.

28-ந் தேதி (புதன்கிழமை) காலை ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி வருகிறார். அங்கு துறைமுகத்தில் உள்ள நிர்வாக அலுவலகத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்கிறார். பின்னர், குலசேகரன்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகளை 28-ந் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்.

ரூ.550 கோடி மதிப்பீட்டில் ராமேஸ்வரம் பாம்பன் கடலின் நடுவே கட்டப்பட்ட புதிய ரெயில்வே தூக்கு மேம்பாலத்தையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். பிரதமர் மோடி தமிழகம் வருவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

RELATED ARTICLES

Recent News