இளையராஜாவிற்கு திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்.பியுமான கனிமொழி ஆறுதல் தெரிவித்தார்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி சமீபத்தில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
இந்த நிலையில், நேற்று மாலை திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி சென்னை தியாகராஜா நகருக்கு சென்று பிரபல இசையமைப்பாளரும், எம்.பியுமான இளையராஜா மற்றும் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.