மாநகரப் பேருந்தில் திடீர் ஓட்டை…கீழே விழுந்த பெண் பயணி

சென்னை திருவேற்காட்டில் இருந்து வள்ளலார் நகர் செல்லும் தடம் எண் 59 பேருந்து, என்.எஸ்.கே. நகர் சிக்னலை கடந்த போது, பேருந்தின் பின் இருக்கையின் கீழ் இருந்த பலகை உடைந்தது. இதில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் கீழே சறுக்கியபடி விழுந்தார்.

பயணிகளின் அலறல் சத்தத்தைக் கேட்ட ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியுள்ளார். இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. கீழே விழுந்த பெண் பயணிக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்ட பேருந்தில் இருந்த பயணிகள் மாற்றுப் பேருந்து வரவழைக்கப்பட்டு, அதில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

மாநகரப் பேருந்து பலகை உடைந்து, பேருந்தில் ஏற்பட்ட ஓட்டையில் ஒரு பயணி சாலையில் கீழே விழுந்த சம்பவம் தற்போது சென்னை முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News