தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன். இவர் நேற்று முன்தினம் ராமேசுவரம் வந்த பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்று அவருடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
இந்நிலையில் நேற்று அமைச்சர் மதிவேந்தனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து நேற்று இரவு கோவையிலுள்ள ஜெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு குடலிறக்க பிரச்சனைக்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
தற்போது மருத்துவ கண்காணிப்பு உள்ள மதிவேந்தன், சிகிச்சை முடிந்து நாளை வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.