பஞ்சாப் மாநிலம் பரீத்கோட் மாவட்டத்தில் உள்ள பரீத் பல்லைக்கழகத்தில் சுகாதார பணியாளர்களுக்கான தேர்வு நடைபெற்றது. இதில் இளம்பெண் போன்று சந்தேகத்திற்குரிய வகையில் ஒருவர் தேர்வெழுதி உள்ளார். இதையடுத்து பயோமெட்ரிக் உபகரணங்கள் உதவியுடன் சோதனை நடத்தியபோது, அவர் ஆண் என்பது தெரிய வந்தது.
இது குறித்து அவரிடம் நடத்திய விசாரணையில் தன்னுடைய காதலி பரம்ஜித் கவுருக்காக அவர் இத்தகைய செயலை செய்தது தெரிய வந்தது.
முன்னதாக அவர் பெண்கள் உடையை அணிந்திருந்த அவர், நெற்றியில் பொட்டுடன், கையில் சிவப்பு வளையல்கள் அணிந்திருந்தார். மேலும், உதட்டுச் சாயம் பூசியிருந்தார். இதனை தொடர்ந்து, போலீசார் அவர்மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.