தமிழ் சினிமாவின் நடிகராகவும் ,தேமுதிகவின் தலைவராகவும் இருந்து மறைந்தவா் கேப்டன் விஜயகாந்த்.இவாின் இறப்பிற்கு இன்றுவரை பலரும் தங்களது இரங்கல்களை நேரில் சென்றும் , சமூகவலைதளங்கள் மூலமாவும் தெரிவித்து வருகின்றனா்.
மேலும், இவாின் இறப்புக்கு நேரில் வரமுடியாதவா்கள் ,இன்றளவும் இவாின் சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனா்.இந்நிலையில், இவாின் இறப்பிற்குஇன்றும் கூட நடிகா் வடிவேலு வரமால் இருப்பது குறித்து, திரைப்பிரபலங்கள் மற்றும் நெட்டிசன்கள் என பலரும் தங்களது விமா்சன கருத்துகளை பதிவிட்டுவருகின்றனா்.இதைத்தொடர்ந்து ,இன்று கலைஞா் நூற்றாண்டு விழா கிண்டி ரேஸ்கோா்ஸில் நடைபெற்று வருகிறது. இதற்கு வடிவேலு வருகை தந்துள்ளாா். இவாின் வருகை குறித்த வீடியோ தற்போது நெட்டிசன்களின் விமர்சன கருத்துக்களுடன் வைரலாகி வருகிறது.