அறிமுக இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கிய திரைப்படம் ‘கான்ஜுரிங் கண்ணப்பன்’. இப்படத்தில் சதீஷ், நாசர், சரண்யா பொன்வண்ணன், ஆனந்த்ராஜ், ரெஜினா கசன்ட்ரா, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
கான்ஜூரிங் கண்ணப்பன் திரைப்படம் கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் OTT ரிலீஸ் தேதி குறித்த அறிவுப்பு வெளியாகியுள்ளது.
அதன் படி கான்ஜூரிங் கண்ணப்பன் திரைப்படம் வரும் ஜனவரி 5 ஆம் தேதி பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.