ப்ளு ஸ்டார் என்ற படத்தின் போது, காதலிக்கத் தொடங்கிய அசோக் செல்வனும் கீர்த்தி பாண்டியனும் கடந்த செப்டம்பர் மாதம் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கேட்கப்பட்ட கேள்வியால் கீர்த்தி பாண்டியன் கோபமடைந்துள்ளார். அதாவது, திருமணம் ஆகிவிட்டது, இனி தொடர்ந்து நடிப்பீர்களா? என்று கேள்விக்கு இதே கேள்வியை என் கணவர் அசோக் செல்வனை பார்த்து கேட்பீர்களா? காலம் காலமாக ஹீரோயின்களிடம் இதே கேள்வி தானா? என்றார்.
இது குறித்து அசோக் செல்வனிடம் கேட்டபோது, சரியாத்தான் சொல்லிருக்காங்க என்றும் நான் அவங்க ஓனர் இல்லை. பார்ட்னர் தான் என்று மாஸ் காட்டியுள்ளார் கீர்த்தி பாண்டியனின் கணவர் அசோக் செல்வன்.