தமிழகத்தில் 11 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்..!!

தமிழகத்தில் 11 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து முதன்மை செயலாளர் அமுதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவன தலைமை கண்காணிப்பு அதிகாரியாக அமரேஷ் புஜாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஐ.ஜி. ஆக பிரமோத் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மகளிருக்கு எதிரான குற்றப்பிரிவின் ஐ.ஜி. ஆக தமிழ்சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மாநகர போக்குவரத்து துணை ஆணையராக பாஸ்கரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மாநகர சட்டம் ஒழுங்கு (தெற்கு) இணை ஆணையராக தர்மராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை சிவில் சப்ளை சி.ஐ.டி பிரிவின் எஸ்.பி. ஆக சந்திரசேகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மதுரை மாநகர துணை ஆணையராக பாலாஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. ஆக பிரதீப் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. ஆக சமய் சிங் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஏ.டி.ஜி.பி. கல்பனா நாயக், சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. ஆக மகேஷ்வர் தயாள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

RELATED ARTICLES

Recent News